என் தமிழ்

கிள்ளானில் ‘பைரவி சாரீஸ் ஸ்பா’ திறப்பு : டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பங்கேற்பு

சிலாங்கூர், 21 ஜூலை 2026 : சிலாங்கூர் மாநிலம் கிள்ளானில், பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படும் ‘பைரவி சாரீஸ் ஸ்பா’ என்ற புடவை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் மையத்தை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா. தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் திறந்து வைத்தார்.

இந்த நிறுவனம் புடவைகளை நெய்வதோடு மட்டுமல்லாமல், பெண்கள் உணர்வுபூர்வமாக பாதுகாத்து வரும் பழைய மற்றும் பாரம்பரிய புடவைகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுப்பித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தரும் சேவையையும் வழங்குகிறது.

இந்தப் புதிய முயற்சி, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான அணுகுமுறையையும் ஊக்குவிப்பதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் பாராட்டினார்.

இந்த நிறுவனத்தைத் தொடங்கிய உரிமையாளர் திரு. அருணுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், மலேசியாவில் பாரம்பரிய இந்திய வணிகத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் உள்ளூர் தொழில் முனைவோர்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், ‘பைரவி சாரீஸ் ஸ்பா’வின் இந்த புதிய முயற்சி பெரும் வெற்றியைப் பெற்று, பாரம்பரிய புடவைகளைப் பாதுகாக்கும் முன்னோடி நிறுவனமாக வளர வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Scroll to Top