கோலாலம்பூர், 15 ஜூலை 2026 : மலேசிய மனிதவள அமைச்சு (KESUMA), வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கான (Quota) விண்ணப்பங்கள் இனி 100 சதவீதம் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் Foreign Workers Centralised Management System (FWCMS) இணையதளம் மூலம் எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படையான முறையிலும் மேற்கொள்ளலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாளிகள் முதலில் தங்களது அடையாளப் பதிவை (Employer ID) பதிவு செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அதன் நிலையை இணையம் வழியாகவே கண்காணிக்க முடியும்.
இந்த புதிய நடைமுறையின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்ப செயல்முறை மேலும் திறமையாகவும், விரைவாகவும் அமையும் என மனிதவள அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான (FAQ) தகவல்கள் FWCMS இணையதளத்தில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







