15 ஜூலை 2026 : கர்நாடக இசை தரம்–8 (Grade 8 Carnatic Vocal) தேர்வில் ஸ்ரீ கணேசன் சிவயோகேந்திரன் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று சிறப்புச் சாதனை படைத்துள்ளார். டாக்டர் சுபத்ரா ஜெயசீலன் அவர்களின் மாணவரான இவர், தனது விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் இசையின் மீது கொண்ட அர்ப்பணிப்பின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
இவரது இந்தச் சாதனைக்கு சுகம் கர்நாட்டிகா அமைப்பு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இது அவரது இசைப் பயணத்தில் மேலும் பல உயரங்களை அடைய வழிவகுக்கும் என்றும் பாராட்டியுள்ளது. மாணவரின் இந்த வெற்றி, கர்நாடக இசையில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.






