என் தமிழ்

தழல் மீடியாவின் 14ஆம் ஆண்டு விழா : கோலாலம்பூரில் கோலாகல கொண்டாட்டம்

கோலாலம்பூர், 14 ஜூலை 2026 : தழல் மீடியாவின் 14ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ‘ஆனந்த தேன்காற்று 2026’ நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. வீரா நெட்வொர்க் பெருமையுடன் வழங்கிய இந்த நிகழ்ச்சியில், கலை, இலக்கியம் மற்றும் தமிழ் ஊடகத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இசை, நடனம், சிறப்பு கலைநிகழ்ச்சிகள், பாராட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும், தழல் மீடியாவின் 14 ஆண்டுகால ஊடகப் பயணம், அதன் சமூகப் பங்களிப்பு மற்றும் தமிழ் மொழி, கலை, பண்பாட்டிற்காக ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்பட்டன.

மலேசியாவில் தமிழ் ஊடக வளர்ச்சிக்கும், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் தழல் மீடியா தொடர்ந்து பணியாற்றி வருவதாக நிகழ்வில் பங்கேற்றோர் பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Scroll to Top