என் தமிழ்

மிட்லண்ட்ஸ் சதுரங்கப் போட்டி: SJKT BMC மாணவர்கள் அசத்தல்

14 ஜூலை 2026 : மிட்லண்ட்ஸ் சதுரங்கப் போட்டி 2026-இல் SJKT பந்தார் மகோட்டா சேராஸ் பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட உமேஷ், ஐந்தாவது இடத்தைப் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அதேவேளையில், செரினா பால்தசார், மிட்லண்ட்ஸ் சதுரங்கப் போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் இடம்பிடித்து பாராட்டைப் பெற்றார்.

மாணவர்களின் இந்த வெற்றிக்கு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் பலனாக இந்தச் சாதனை கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வெற்றி, பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், எதிர்கால போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

Scroll to Top