பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ நாணயத்தை வரியாக செலுத்திய இளம்பெண்.

பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ நாணயத்தை வரியாக செலுத்திய இளம்பெண்.

france

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் 28 வயது கொண்ட ஆட்ரி டி என்பவர் அரசாங்கம் பொதுமக்களிடம் வசூலிக்கும் அதிகப்படியான வரி விதிர்ப்பிற்கான  தனது எதிர்ப்பை நூதனமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். முந்தைய ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம்  இவர்களுக்கான  வரித்தொகையை அந்நாட்டு மக்கள் செலுத்த வேண்டும். வேலையில்லாத இவரது கடந்த ஆண்டு வருமானம் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 1400 யூரோக்கள் ஆகும். இதனால் இந்த ஆண்டு 1107 யூரோக்கள் அவருக்கான வரித்தொகையாக விதிக்கப்பட்டிருந்தது. இதனை சரியான நேரத்தில் கட்டுவதற்காக தனது காரை விற்கநேர்ந்ததாக ஆட்ரி குறிப்பிட்டுள்ளார். ஒரே தவணையில் இந்தப் பணத்தை செலுத்த எடுத்து சென்றபோது ஒரு தவணையில் 300 யூரோக்கள் மட்டுமே கட்டமுடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டதால் மூன்று தவணை முதலில் கட்டியுள்ளார். அதன்பின்னர் மீதமுள்ள 207 யூரோக்களையும் நாணயங்களாக மாற்றிச்சென்று அதிகாரி முன் அளித்துள்ளார்.இந்த நாணயங்கள் மொத்தம் 30 கிலோ கிராம் எடை இருந்துள்ளது.