ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை எதிர்ப்பதற்க்காக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை எதிர்ப்பதற்க்காக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

isis

 

தலை துண்டிப்பு மிரட்டல் எதிரொலியின் காரணமாக ஐ.எஸ். படைக்கு எதிராக ஆஸ்திரேலியா உஷார் நிலையில் உள்ளது. தங்களிடம் சிக்கும் ஆஸ்திரேலிய பொதுமக்களை உத்தேசமாக தேர்வு செய்து, பொது இடத்தில் வைத்து தலையை துண்டிக்கும் செயலில் ஈடுபட ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமது நாட்டின் உளவுத் துறை விடுத்த இந்த எச்சரிக்கையை அடுத்து, விவரம் எதனையும் குறிப்பிடாமல், நாட்டுக்கு பயங்கரவாத தாக்குதலால் ஆபத்து உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தமது ஆதரவாளர்களைக் கொண்டு சிட்னி, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் குடிமக்களை பொது இடங்களில் படுகொலை செய்ய ஐ.எஸ்.ஐ.எஸ்.கிளர்ச்சி அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.இதனை வெறும் சந்தேகப் பார்வையோடு நிறுத்திவிடாமல், அவர்களின் நோக்கம் அறிந்து, நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அசம்பாவிதத்தை தடுக்கும்  நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய அரசு இறங்கியுள்ளது என்றார்.