சி.பி.ஐ. இயக்குனராக இருக்கும் ரஞ்சித் சின்ஹா 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அவர் இல்லத்தில் வைத்து சந்தித்தாக பிரபல வக்கீலும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூசண், குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அதற்காக பதிவேட்டை என் வீட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் போட்டு விட்டுச் சென்றனர் என்று கூறியிருந்தார்.
அந்த வருகை பதிவேட்டை சீலிட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருகை பதிவேட்டை அளித்தவரின் பெயரை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் ரஞ்சித் சின்ஹா வீட்டின் வருகை பதிவேட்டை அளித்தவர் பெயரை வெளியிட சி.பி.ஐ.எல். தொண்டு நிறுவனம் மறுத்துவிட்டது.
இந்த தகவலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அவரது பெயரை வெளியிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளது.