என் தமிழ்

தந்தை பெரியார் சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

5

தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளையொட்டி, சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தமிழ்நாடு அரசின் சார்பாக திருப்பூரில் அவரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் சென்னையில் திமுக தலைவர் மு.கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Scroll to Top