அரசுக்கு நிவாரண உதவியாக ரூ. 1000 கோடி நிதியுதவியாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் நிதியுதவி வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது திரிபுரா அரசும் காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியை வழங்க உள்ளதாக அம்மாநில உணவு மற்றும் நுகர்பொருள் வாணிபத்துறை மந்திரி பானு லால் சாஹா கூறியுள்ளார்.