02 ஜூலை 2026 : ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட கும்பாபிஷேக மலர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து கொண்டு மலரை வெளியிட்டு சிறப்பித்தார்.
நிகழ்வைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் அருளால் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துத் தெரிவித்தார். கும்பாபிஷேக நன்னாளில் திருக்குட முழுக்கைக் கண்டு தரிசிக்கும் அனைத்து பக்தர்களும், அவர்களது குடும்பத்தினரும் மேற்கொள்ளும் அனைத்து நற்செயல்களிலும் வெற்றியும், வளமும், நலனும் பெற வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், ஆலயங்கள் ஆன்மிக ஒற்றுமையையும், சமய பாரம்பரியத்தையும் நிலைநிறுத்தும் முக்கிய மையங்களாக விளங்குகின்றன என்றும், இத்தகைய கும்பாபிஷேக விழாக்கள் பக்தி உணர்வையும் சமூக நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








