சிலாங்கூர், 14 ஆகஸ்ட் 2026 : செலாயாங் ஜெயா மக்களின் முக்கியமான சமூக மற்றும் வழிபாட்டுத் தலமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும் குவா நா நெங் கோவிலுக்கு கோபிந்த் சிங் தியோ நன்கொடை மற்றும் ஆதரவை வழங்கினார்.
குவா நா நெங் கோவிலில் நடைபெற்ற மூன்று தெய்வங்களான சான் வாங் ஃபூவின் 52ஆவது ஆண்டு விழாவையொட்டி இந்த ஆதரவு வழங்கப்பட்டது. Zhu, Xing மற்றும் Li Dar Ren Gong ஆகிய மூன்று தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு, ஆசீர்வாதம், அமைதி, பாதுகாப்பு, நோய் மற்றும் துன்பங்களில் இருந்து காப்பு, அத்துடன் வாழ்வில் செழிப்பு ஆகியவற்றை வேண்டுகின்றனர். இதனையொட்டி நடைபெற்ற Thousand-Person Peace and Blessings Dinner எனும் ஆயிரம் பேர் பங்கேற்ற அமைதி மற்றும் ஆசீர்வாத விருந்திலும் கோபிந்த் சிங் தியோ கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வு வெறும் சமய நம்பிக்கை மற்றும் பக்தியின் வெளிப்பாடு மட்டுமல்ல என்றும், தலைமுறை தலைமுறையாக அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து வரும் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்தும் பண்பையும் வெளிப்படுத்துவதாக கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.
மேலும், சமூக உறுப்பினர்களுக்கு இடையிலான வலுவான உறவுகளையும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் சமூக உணர்வையும் இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
குவா நா நெங் கோவில் மற்றும் செலாயாங் ஜெயா சமூகத்தினரிடையே நிலவி வரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வு தொடர்ந்து வலுப்பெற்று, அனைவருக்கும் அமைதி, ஆசீர்வாதம் மற்றும் செழிப்பை கொண்டுவர வேண்டும் என்றும் கோபிந்த் சிங் தியோ வாழ்த்து தெரிவித்தார்.





