என் தமிழ்

17வது IPG பட்டமளிப்பு விழா : புதிய ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

29 ஜூன் 2026 : 17வது ஆசிரியர் கல்வி நிறுவனம் (IPG) பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் அமர்வு கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆசிரியர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய வோங் கா வோ, பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து, நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் புதிய ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மலேசிய கல்வித் திட்டம் (RPM) 2026–2035 மற்றும் 2027ஆம் ஆண்டு அமலுக்கு வரவுள்ள புதிய பள்ளிப் பாடத்திட்டத்தின் இலக்குகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இந்த புதிய கல்வியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

‘ஆசிரியர்களே, தேசத்தின் இதயம்’ என்ற இந்த ஆண்டின் கருப்பொருளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த விழா, நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் அமைந்தது.

Scroll to Top