கோலாலம்பூர், 25 ஜூன் 2026 : BUDI MADANI இலக்கு எரிபொருள் மானியத் திட்டத்தின் கீழ், 2026 மே 31-ஆம் தேதி வரையில் மொத்தம் RM11.2 பில்லியன் மதிப்பிலான மானியம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 40 இலட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
MyKad அடிப்படையிலான மானிய வழங்கல் முறையின் மூலம், தகுதியுடைய மலேசியர்களுக்கு மானியம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மானியம் உண்மையில் தகுதியுடையவர்களையே சென்றடைவதுடன், கசிவுகளையும் தவறான பயன்பாட்டையும் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலக்கு மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, எரிபொருள் பயன்பாடு மற்றும் மானிய விநியோகம் அதிக வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதாகவும், அரசின் நிதிச் சுமையைக் குறைப்பதோடு பொதுமக்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசு, BUDI MADANI திட்டத்தின் செயல்திறனை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், இலக்கு மானியக் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. மானியங்கள் உண்மையில் தேவைப்படுபவர்களை சென்றடைவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.






