புத்ராஜெயா, 23 ஜூன் 2026 : மலேசியா–சீனா 2026 நிபுணத்துவப் பரிமாற்றத் திட்டத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, அதிகாரப்பூர்வ கொடியசைப்பு (Flag-Off) நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் (MOSTI) ஏற்பாடு செய்த இந்தத் திட்டத்தின் மூலம், இரு நாடுகளின் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவு, அனுபவம் மற்றும் திறன்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மேலும், கூட்டு ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப மேம்பாடு, புத்தாக்க முயற்சிகள் மற்றும் மனிதவள திறன் வளர்ச்சி ஆகிய துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மலேசியாவின் திறனை மேம்படுத்துவதுடன், சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, நாட்டின் புத்தாக்க வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.






