கோலாலம்பூர், 21 ஜூன் 2026 : தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் NEET (UG) 2026 மறுதேர்வு இன்று கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தேர்வு மலேசிய நேரப்படி மாலை 4.30 மணி முதல் 7.45 மணி வரை நடைபெறும்.
கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸில் அமைந்துள்ள குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மையத்தின் பிரதான நுழைவாயில் மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படும். தேர்வர்கள் பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரையிலான நேரத்தில் கட்டாயம் தேர்வு மையத்தை அடைய வேண்டும்.
மாலை 4.00 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அனுமதிச் சீட்டு, தேவையான புகைப்படங்கள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை கட்டாயம் எடுத்துவர வேண்டும். மேலும், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்கள் மற்றும் உடை விதிமுறைகளைப் பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே தேர்வு மையத்திற்குள் கொண்டு வருமாறும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.







