16 ஜூன் 2026 : கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் (KLSICCI) 2026–2028 காலத்திற்கான நிர்வாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைவர் பதவிக்கான போட்டியில் வி.கே.கே. ராஜசேகரன் 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரபாகரன் வைத்திலிங்கம் 148 வாக்குகள் பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு மோகனா சின்னத்தம்பி 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பானிர் செல்வம் சந்திரசேகரன் 137 வாக்குகள் பெற்றார். உதவித் தலைவர் பதவிக்கான போட்டியில் டாக்டர் சித்ரா தேவி எஸ். பாலகிருஷ்ணன் 153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குமரன் முனியாண்டி 149 வாக்குகள் பெற்றார்.
கௌரவ பொருளாளர் பதவிக்கு டாக்டர் இஸ். இர். பிரபாகரன் ராஜா தியாகராஜா 158 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டார். சண்முக செல்வி ராஜகோபால் 144 வாக்குகள் பெற்றார்.



இதனுடன், 14 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் குமரகுரு முனியாண்டி 203 வாக்குகளுடன் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.
தொடர்ந்து பிரவின் செல்வம் தமிழ்ச் செல்வம் (172), டாக்டர் ராஜசேகர் மோகன் (171), குளோரி மார்த்தாண்டன் (168), டத்துக் கணேஷ் முராஜ் கே. ராஜாமணி (167) உள்ளிட்டோர் தேர்வாகினர். புதிய நிர்வாகக் குழு 2026 முதல் 2028 வரை அமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லவுள்ளது.









