ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு – 1 ராணுவ வீரர் பலி.

ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு – 1 ராணுவ வீரர் பலி.

4

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சுனெயா கலி பெல்ட் பகுதியில் குண்டு வெடித்தது. இந்த குண்டு கண்ணி வெடிகுண்டு என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமை தூக்கி கான் முகமத் என்பவர் பலியாகினார். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது.