என் தமிழ்

சமய சொற்பொழிவால் ஆன்மிக விழிப்புணர்வு : MIPP நிகழ்ச்சி

 14 ஜூன் 2026 : மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) கோலா லங்காட் தொகுதியின் ஏற்பாட்டில், தெலுக் பங்லிமா கராங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சமய சொற்பொழிவு மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் தொடக்கி வைத்தார். நிகழ்வில் ஆன்மீக விழுமியங்கள், அறநெறி மற்றும் சமுதாய முன்னேற்றம் தொடர்பான கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மகேந்திர குருக்கள் சமய சொற்பொழிவாற்றி, மனித வாழ்க்கையில் ஆன்மீகத்தின் அவசியம் மற்றும் அறவழி வாழ்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, கதிரவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் வழங்கிய பக்தி இன்னிசை நிகழ்ச்சி, கலந்து கொண்ட பக்தர்களை கவர்ந்ததுடன் ஆன்மீக உணர்வை மேலும் உயர்த்தியது.

இந்நிகழ்வில் MIPP சிப்பாங் தொகுதி தலைவர் மன்மதன் துரைசாமி, துணைத் தலைவர் பாலமுருகன் லோகநாதன் உள்ளிட்ட கட்சியின் தேசிய, மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் ஆலய நிர்வாகத்தினர், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் மூலம் சமூக ஒற்றுமையையும் ஆன்மீக விழிப்புணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Scroll to Top