என் தமிழ்

கேரளா அரசு அறிவிப்பு : பெண்களுக்கு ஜூன் 15 முதல் கட்டணமில்லா பயணம்

கேரளா, 10 ஜூன் 2026 : கேரள அமைச்சரவை, மாநில போக்குவரத்துக் கழகமான KSRTC-யின் சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்க முடிவு செய்துள்ளது. பிரியதர்ஷினி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் ஜூன் 15 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்தச் சலுகை அனைத்து வயதினரான பெண்களுக்கும், அவர்களின் வருமான நிலையைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். ஆரம்ப கட்டமாக இந்தத் திட்டம் KSRTC-யின் சாதாரண சேவைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தால் ஆண்டுக்கு சுமார் 800 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிதி தாக்கம் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் மற்ற வகை பேருந்து சேவைகளுக்கும் இந்தச் சலுகையை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Scroll to Top