என் தமிழ்

டோக்கியோ : பிரதமர் அன்வாருக்கு சிறப்பான அரசு மரியாதை

டோக்கியோ, 10 ஜூன் 2026 : ஜப்பானுக்கான தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜப்பான் பிரதமர் சனையே தகாய்ச்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றார்.

வருகை தந்த பிரதமர் அன்வாரை ஜப்பான் பிரதமர் சனையே தகாய்ச்சி நேரில் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர், ஜப்பான் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு அன்வார் அறிமுகப்படுத்தப்பட்டார். அதேவேளையில், மலேசிய அரசாங்க பிரதிநிதிகளையும் அவர் தகாய்ச்சிக்கு அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மலேசியா–ஜப்பான் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ பயணம், இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய கூட்டாண்மையை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Scroll to Top