என் தமிழ்

மலேசியாவின் முதல் 5G-SA கிடங்கை அறிமுகப்படுத்திய CelcomDigi

ஷா ஆலம், 09 ஜூன் 2026 : CelcomDigi நிறுவனம் மலேசியாவின் முதல் 5G Standalone (5G-SA) தொழில்துறை வணிக-வணிக (B2B) நேரடி பயன்பாட்டு மையமாக செயல்படும் Advanced Intelligent Warehouse எனும் கிடங்கை ஷா ஆலமில் அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோடிக்ஸ், தானியக்க முறைமைகள் மற்றும் 5G-SA தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ள இந்த கிடங்கு, பொருள் கையாளல் மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளில் உற்பத்தித்திறன், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் கிடங்கு இடப் பயன்பாடு 30 சதவீதம் வரை மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், செயல்பாட்டு திறன் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், பொருட்களின் இருப்பு கண்காணிப்பு துல்லியம் கிட்டத்தட்ட 100 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் மற்றும் ஆபத்தான பணிகளை தானியக்க முறைமைகள் மூலம் மேற்கொள்வதன் மூலம் பணியிட பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் அதிக மதிப்புள்ள பணிகளில் கவனம் செலுத்தும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

Move Robotics, Infinium Robotics, Ailytics, Cobra Security Electronics (CSE) மற்றும் ZTE உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நிதி அமைச்சு, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புதுமை அமைச்சு மற்றும் Cradle Fund ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் Bengkel Inovasi GLC (BIG) திட்டத்தின் கீழ் இந்த முயற்சிக்கு மானியமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கை தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

CelcomDigi தலைமை செயல் அதிகாரி அல்பெர்ன் முர்ட்டி கூறுகையில், 5G மற்றும் AI தொழில்நுட்பங்களின் நடைமுறை பயன்பாடுகளை வணிக நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தி, மலேசியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வேகப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்றார்.

Scroll to Top