கோலாலம்பூர், 09 ஜூன் 2026 : 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் (Sukan Asia 2026) மலேசிய இ-ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு (MESF) குறைந்தபட்சம் 6 பதக்கங்களை வெல்ல இலக்கிடப்பட்டுள்ளது.
MESF தலைவர் முகமது நைம் அல்-அமின் தெரிவித்ததாவது, மலேசிய இ-ஸ்போர்ட்ஸ் வீரர்களிடம் உலகத் தரத்திற்கு போட்டியிடக்கூடிய மிகுந்த திறன் இருப்பதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தற்போது மலேசிய அணி Honor of Kings, Identity V, Naraka: Bladepoint ஆகிய மூன்று விளையாட்டு பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளது. மேலும் Mobile Legends: Bang Bang (MLBB) மற்றும் PUBG Mobile போன்ற பிரபலமான விளையாட்டு பிரிவுகளுக்கான தகுதி சுற்றுகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.
தகுதி சுற்றுகள் முடிந்த பிறகு, மலேசிய ஒலிம்பிக் கவுன்சிலுடன் ஆலோசித்து, எந்த அணிகள் இறுதியாக போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த இலக்கு, மலேசியாவின் இ-ஸ்போர்ட்ஸ் துறையில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.






