கோலாலம்பூர், 05 ஜூன் 2026 : ACC மகளிர் பிரீமியர் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் மலேசிய மகளிர் அணி தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தது. சிங்கப்பூர் மகளிர் அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மற்றொரு முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த மலேசிய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 120 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் 121 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிங்கப்பூர் அணி, மலேசிய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் சிறப்பான களத்தடுப்பால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
முழு அணியின் ஒருங்கிணைந்த ஆட்டத்திறனும், பந்துவீச்சாளர்களின் துல்லியமான செயல்பாடும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, 120 ஓட்டங்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக பாதுகாத்த மலேசிய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ACC மகளிர் பிரீமியர் கோப்பை தொடரில் மலேசிய அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர்வதுடன், தொடரின் வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.
மலேசிய மகளிர் அணியின் இந்த சிறப்பான செயல்பாடு, நாட்டில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் புதிய உத்வேகத்தை அளிப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.






