என் தமிழ்

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து

24 மே 2026 : தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பதிவின் மூலம் அவர் இந்த வாழ்த்தை தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக திரைப்படங்களில் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் வில்லன்களை எதிர்த்து போராடிய விஜயை மக்கள் தற்போது மிகப்பெரிய பொறுப்புடன் தமிழகத்தின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார். மேலும், “ஒரு விரல் புரட்சி” வரலாறு படைக்கும் தருணத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மக்கள் உறவுகள் உள்ளதாக கூறிய அவர், எதிர்காலத்தில் முதலமைச்சர் விஜயுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த விஜய், மலேசிய பிரதமரின் அன்பான வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, தமிழகத்திற்கும் மலேசியாவிற்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியுடன் செயல்படுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top