என் தமிழ்

“பொன்னோவியம் 2” : பாரம்பரிய கலைக்கு புதிய உயிர் கொடுக்கும் ஓவியக் கண்காட்சி

கோலாலம்பூர், 23 மே 2026 : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் (NSCBICC) மற்றும் கோலாலம்பூரிலுள்ள இந்திய உயர் ஆணையம் இணைந்து நடத்தும் “பொன்னோவியம்-2” தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி இன்று கோலாலம்பூரில் தொடங்கியது.

திருமதி வள்ளி செவுகன் மற்றும் அவரது மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்திய பாரம்பரிய கலை மரபின் தனித்துவத்தையும், தஞ்சாவூர் ஓவியங்களின் நுணுக்கமான கலைப்பாணியையும் வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

NSCBICC பல்நோக்கு அரங்கில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, 23 மே முதல் 29 மே 2026 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொற்கலர் அலங்காரங்கள், ஆன்மிகக் கூறுகள் மற்றும் பாரம்பரிய ஓவிய நயங்களால் சிறப்புப் பெறும் தஞ்சாவூர் ஓவியங்களை அருகில் கண்டு ரசிக்கும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகிறது. கலை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Youtube Live Link :

https://youtube.com/live/4H0J4VSb_rQ


Scroll to Top