ஜோகூர், 07 ஜூலை 2026 : ஜோகூர் மாநிலத்தின் பாலோ (Paloh) சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக செயல் கட்சி (DAP) சார்பில் போட்டியிடும் இந்திய இளம் வேட்பாளர் டாக்டர் ரூபன், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன், தொகுதியின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களையும் விளக்கி வருகிறார்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக, குடியிருப்புப் பகுதிகள், கிராமங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு நேரில் சென்று மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்த அவர், அனைவருக்கும் சமமான வளர்ச்சி, மேம்பட்ட உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க உறுதியளித்தார்.
பொதுமக்களுடன் கலந்துரையாடிய டாக்டர் ரூபன், மக்களின் நம்பிக்கையைப் பெற்று சேவை செய்வதே தனது முக்கிய இலக்கு என்றும், அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
பிரசாரத்தில் ஹராப்பான் கூட்டணியின் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக பங்கேற்று, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு கோரினர். தேர்தல் பிரசாரத்தின் போது பானி செங்யீக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பாலோ தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளரான டாக்டர் ரூபன், மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.






