20 மே 2026 : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நியூடெல்லியில் நடைபெறவுள்ளதாக ரஷ்ய தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா தலைமையில் நடைபெறும் 2026 பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், உலக பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு, புவிசார் அரசியல் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
புதினின் இந்த பயணம், இந்தியா–ரஷ்யா உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. மேலும், கடந்த ஒரு ஆண்டிற்குள் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகவும் இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





