என் தமிழ்

எம்.ஐ.சி 80-வது ஆண்டு விழா : ஒற்றுமை மற்றும் போராட்டத்தின் அடையாளமாக புதிய சின்னம்

கோலாலம்பூர்,  19 மே 2026 : எம்.ஐ.சி கட்சியின் 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் சிறப்பு சின்னம் வெளியிடும் நிகழ்ச்சி மே 14ஆம் தேதி எம்.ஐ.சி தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் எம்.ஐ.சி தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், பிரதித் தலைவர் எம். சரவணன், கட்சியின் உச்ச தலைமைத்துவம், மத்திய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள் மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

“80 ஆண்டுகள் போராட்டம் • 80 ஆண்டுகள் தேசத்தைக் கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சமூக சேவை மற்றும் தேசிய வளர்ச்சியில் எம்.ஐ.சி கட்சியின் நீண்டகால பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அமைந்தது.

இதனிடையே, எம்.ஐ.சி 80-வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான சின்னம் உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்ற கூட்டாட்சிப் பிரதேச எம்.ஐ.சி மாநில மகளிர் தலைவர் திருமதி ஜெயந்தி பாராட்டப்பட்டார்.

இந்த விழா, சமூகத்திற்காக தொடர்ந்து போராடி வரும் எம்.ஐ.சி-யின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால நோக்கை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Scroll to Top