என் தமிழ்

ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ டிரெய்லர் வெளியானது

19 மே 2026 : தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சிவ ராஜ்குமார், திவ்யேந்து சர்மா மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஜூன் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

டிரெய்லரில் ராம் சரண் அதிரடி மற்றும் உணர்ச்சிமிக்க கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top