குஜராத்தின் வதோதரா நகரின் அருகே உள்ள விஸ்வமித்ரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நகருக்குள் புகுந்த முதலை மற்றும் பாம்புகளும் ஊருக்குள் வந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர்கள் மேல் மாடிகளிலும், பிற பகுதிகளிலும் அடைக்கலம் அடைந்தனர்.படகு மூலமாக மக்களை காப்பாற்றி கொண்டு சென்றபோது படகின் அருகில் முதலைகள் மற்றும் பாம்புகள் நீந்தி வருவதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். ஆனால் அதை பற்றி மக்களிடம் கூறினால், பயத்தில் படகை சாய்த்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அதனை கூறாமல் மறைத்துள்ளனர். மேலும், சுமார் 204 முதலைகள் வசித்து வருகின்றன என தகவல் தெரிவித்தனர்.முதலைகள் மற்றும் பாம்புகள் கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.