நேற்றைய தமிழ் நாளிதழில்(மக்கள் ஓசை) குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோர் ம.இ.காவில் அங்கத்துவம் பெற்றிருப்பதாகவும் அரசியல் தலைவர்களுடன் இணங்கி இருப்பதாகவும் அதற்கு காவல்துறை தலைவரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அனைவரும் விரும்பியா குண்டர்கும்பலில் இணைகிறார்கள்? குட்ம்ப சூழ்நிலை, பணம் பற்றாக்குறை, பிழைப்பிற்காகவும், குடும்ப கஷ்டங்களைப் போக்குவற்கும்தான் குண்டர் கும்பலில் சிலர் இணைகிறார்கள். ஆக அவர்களை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டல் அவர்களது வாழ்க்கை இன்னும் பாதாளக் குழிக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. ஒருவர் குண்டர்கும்பலில் ஈடுபட்டால் அவர் இந்தியர் எனும் அடையாளம் இழந்துவிடுவாரா? அவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிடுவதுதான் ஒரே வழியா? அவரை நல்வழிபடுத்தி அவருடைய வாழ்க்கையை திருத்தி அமைக்கவேண்டியது ஒரு சமுதாய தலைவரது வேலை இல்லையா?அந்த சம்பந்தப்பட்ட்வர் குடும்பத்தில் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பொறுப்பு சமுதாயத் தலைவர்செய்யவில்லை என்றால் யார் செய்வார் சொல்ல்லுங்கள்.??
ஆனால் ஒரு அரசியல் தலைவருடன் இணைந்து அந்த குண்டர் முபலைச் சார்ந்தவர் நலம் பெறும் பொழுது அவரது பிள்ளைகள், உற்றார் உறவினர்களின் நலமும் பாதுகாக்கப்படுகிறது. அவர்களது பொருளாதார பிரச்சனை தீர்க்கப்படுகிறது. எத்தனையோ குண்டர் கும்பலை முன்பு சார்ந்தவர்கள் இன்று பலர் சொகுசு காரும். நல்ல பதவிகளிலும், நல்ல வாழ்க்க வாழ்வதை நாம் கன்கூடாக பார்க்கிறோமே. அவர்களது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து சிறப்பாக இருக்கிறார்களே.
ஆனால் அதையும் மீறி குற்றச் செயல்களை செய்யும் நபர்களை கண்டிப்பாக நிச்சயமாக் காவல்துறையினரும் சட்டமும் தண்டிக்கவேண்டும். அது மறுப்பதற்கல்ல.ஒருவர் வாழ்க்கையில் சிறப்பாக வாழும் வகைதான் காட்ட முடியும். வாழுவதும் வாழாமல் போவதும் அவர்வர் விருப்பம். ஆனால் குண்டர்கும்பலில் இருப்போரை கண்டுகொள்ளாமல் கைகழுவி விட்டுச் சென்றால் அவர் சமுதாயத் தலைவர் இல்லை என்பதே என் கருத்து. நன்றி.
இவ்வாறு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் இன்று 12/09/2014 வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.