என் தமிழ்

27 ஆண்டுகளாக சேவை : ஸ்ரீ சாரதா தேவி இல்லத்திற்கு கோபிந்த் சிங் டியோ பாராட்டு

கோலாலம்பூர், 18 மே 2026  : கோபிந்த் சிங் டியோ, கடந்த 27 ஆண்டுகளாக ஆதரவற்ற மற்றும் வசதி குறைந்த சிறுமிகளின் நலனை பாதுகாத்து வரும் பெர்சத்து கெபாஜிகன் ஸ்ரீ சாரதா தேவி இல்லம் மலேசியா அமைப்பின் சேவையை பாராட்டியுள்ளார்.

பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், நிர்வாகத்தின் விடாமுயற்சி மற்றும் சமூகத்தின் ஆதரவால் இந்த நல இல்லம் இன்று வரை உறுதியாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நல இல்லத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் RM50,000 நிதியுதவி வழங்கியதாகவும் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார்.

இதனிடையே, நல இல்லத்தைச் சேர்ந்த மாணவிகள் மூன்று துறைகளில் பட்டம் பெற்றதை கொண்டாடியதில் பெருமை அடைந்ததாக அவர் கூறினார். சிறுவர் கல்வி, பாரம்பரிய பரதநாட்டியம் மற்றும் சிலம்பம் ஆகிய துறைகளில் அவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

“இவர்கள் சமூகத்தின் மாணிக்கங்களாக தொடர்ந்து விளங்கி, எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைய வேண்டும்,” என அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சமூக நல மேம்பாட்டில் தன்னார்வ அமைப்புகளின் பங்கு முக்கியமானது என்றும், மலேசியா மதானி கொள்கையின் அடிப்படையில் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top