ஷா ஆலம், 10 மே 2026 : செலாங்கூரில் நடைபெறவுள்ள SUKMA 2026 மற்றும் பாரா SUKMA 2026 போட்டிகளை முன்னிட்டு, சுக்மா டார்ச் ரன் நிகழ்ச்சியின் குறியீட்டு வெளியீடு இன்று ஷா ஆலமில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை, செலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் EXCO முகமட் நஜ்வான் ஹலிமி தாதரான் கெமர்டேகாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.



நிகழ்வில், செலாங்கூர் SUKMA குழுத் தலைவர் அப்பாஸ் சலிம்மி சே அட்ஸ்மி மற்றும் MSNS நிர்வாக இயக்குநர் முகமது நிஜாம் மர்ஜுகி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஷா ஆலம் நகர சபை (MBSA) ஏற்பாடு செய்த “ஷா ஆலம் வாகனங்கள் இல்லாத நாள்” நிகழ்ச்சியுடன் இணைந்து இந்த டார்ச் ரன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுக்மா மற்றும் பாரா சுக்மா 2026 போட்டிகளை முன்னிட்டு, செலாங்கூர் மக்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.






