மலாக்கா, 10 மே 2026 : மலேசிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், மலேசிய தகவல் துறை (JAPEN) ஏற்பாடு செய்த ‘ஜிவா மதானி’ களப்பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று தஞ்சோங் கிளிங்கில் மடானி சமூகத் தலைவர்களைச் சந்தித்தார்.
இந்த நிகழ்வின் போது, மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த 43 மதானி சமூகத் தலைவர்களுக்கும், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 67 தலைவர்களுக்கும் மொத்தம் 110 நியமனக் கடிதங்களை அமைச்சர் வழங்கினார்.
மதானி சமூக இயக்கத்தை வலுப்படுத்துவதோடு, அரசாங்கத் தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் சமூகத் தலைவர்களின் பங்கையும் இந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில், தகவல் தொடர்புத் துறையின் துணைச் செயலாளர் நாயகம் (மூலோபாயத் தகவல் தொடர்பு மற்றும் ஆக்கத் தொழில்) நிக் கமருசமான் நிக் ஹுசின் மற்றும் JAPEN தலைமை இயக்குநர் ஜூலினா ஜோஹான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
‘ஜிவா மடானி’ திட்டம், சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்பின் மூலம் மதானி அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் மக்கள் நல முயற்சிகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.








