என் தமிழ்

திருநாவுக்கரசர் ஜெயந்தி: சிறப்பு தேவார பக்தி நிகழ்ச்சி செராஸில் நடைபெறுகிறது

செராஸ், 09 மே 2026 : திருநாவுக்கரசர் ஜெயந்தி முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை மற்றும் தேவார பக்தி நிகழ்ச்சி வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மலேசிய இந்து மாமன்றம் கோலாலம்பூர் – அருள்நிலையம் மற்றும் மலேசிய இந்து சங்கம் – செராஸ் உள்ளூர் மன்றம் மற்றும் செராஸ் வட்டாரப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த ஆன்மிக நிகழ்வு, செராஸ் பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சி திங்கட்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் எனப் போற்றப்படும் அப்பர் பெருமானின் அருளைப் பெறும் வகையில், தேவாரம் பாடல்கள், பக்திப் பஜனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

சைவ சமய பாரம்பரியத்தைப் பேணுவதோடு, இளைய தலைமுறைக்கு தேவார மரபை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அனைத்து பக்தர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு இறை அருளைப் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Scroll to Top