என் தமிழ்

ஆயுஷ் கல்வி உதவித்தொகை திட்டம் 2026–2027 : மலேசிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கோலாலம்பூர், 08 மே 2026 : இந்தியத் தூதரகம், 2026–2027 கல்வியாண்டிற்கான “ஆயுஷ் கல்வி உதவித்தொகை திட்டம்” தொடர்பான விண்ணப்பங்களை மலேசிய குடிமக்களிடமிருந்து வரவேற்றுள்ளது.

இந்த உதவித்தொகை திட்டம், இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆயுர்வேதம், யோகா, யூனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட துறைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பங்கள் 2026 மே 15ஆம் தேதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரம்பரிய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தொடர்பான தகுதிகள் மலேசிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா என்பதை விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை தொடர்பான மேலதிக தகவல்களை இந்தியத் தூதரகத்தின் கல்விப் பிரிவு மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top