என் தமிழ்

ராஜினாமா செய்ய மறுத்த மம்தா – மேற்கு வங்க சட்டசபை கலைப்பு

கொல்கத்தா, 08 மே 2026 : மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசியல் பரபரப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக மறுத்ததை அடுத்து, மாநில சட்டசபையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 174(2)(பி) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, மே 7 முதல் மேற்கு வங்காள சட்டசபை கலைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, தாம் ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் அரசியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த விவாதங்கள் தீவிரமடைந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Scroll to Top