என் தமிழ்

77% பெண்கள் கொண்ட நிர்வாகம் – கவனம் ஈர்க்கும் பினாங்கு இந்து சங்கம்

பினாங்கு, 06 மே 2026 : பெண்கள் வெறும் துணை சக்தியாக அல்லாமல், எதிர்காலத்தை வழிநடத்தும் முக்கிய தீர்மானக்காரர்களாக இருக்க வேண்டும் என பினாங்கு மாநில Malaysia Hindu Sangam வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பினாங்கு மாநில மலேசிய இந்து சங்கத்தின் நிர்வாகக் குழுவில் 77 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதையும், அவர்கள் அமைப்பின் முடிவெடுப்பிலும் எதிர்கால திசை நிர்ணயத்திலும் தீவிர பங்காற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வெறும் அடையாள நடவடிக்கை அல்ல, மாறாக நடைமுறையில் பெண்களின் தலைமைத்துவ திறனை வெளிப்படுத்தும் உண்மை நிலை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உயர்மட்ட தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாக உள்ள சூழலில், வாய்ப்பு வழங்கப்பட்டால் பெண்கள் திறமையாக வழிநடத்தவும், கொள்கைகளை வடிவமைக்கவும், சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியும் என்பதை இந்த அமைப்பு நிரூபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

“பெண்கள் முடிவெடுக்கும் மேசையில் இருப்பவர்கள் மட்டுமல்ல; எதிர்காலத்தின் திசையை நிர்ணயிப்பவர்களும் ஆவர்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Scroll to Top