குவாந்தான், 06 மே 2026 : பகாங் மாநிலத்தின் 2023/2024ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விருது விழா இன்று குவாந்தானிலுள்ள சுல்தான் ஹாஜி அகமட் ஷா வெள்ளி விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பகாங் இளவரசரான Tengku Hassanal Ibrahim Alam Shah அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தெங்கு முகம்மது இஸ்கந்தர் ரியாயத்துத்தீன் ஷா உடனிருந்தார். அவர்களை பகாங் மாநில தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக, இளைஞர், விளையாட்டு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கான குழுத் தலைவர் ஃபட்ஸ்லி முகமட் கமால் வரவேற்றார்.
இந்த விழாவில், விளையாட்டு வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, “வளர்ந்து வரும் சிறந்த ஆண் விளையாட்டு வீரர்”, “வளர்ந்து வரும் சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனை”, “சிறந்த ஆண் விளையாட்டு வீரர்” மற்றும் “சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனை” ஆகிய நான்கு பிரிவுகளில் பகாங் விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இவ்விழா, பகாங் மாநில விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கௌரவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.








