என் தமிழ்

சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2026 நிகழ்வில் மூவருக்கு ‘சங்கீத குரு சேவா விருது’

கோலாலம்பூர், 02 நவம்பர் 2026 : சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2026 நிகழ்வில், இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மூவருக்கு ‘சங்கீத குரு சேவா விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சங்கபூஷன் திருமதி அல்லிமலர் மனோகரன், ஆச்சார்ய ரத்னா பன்னிசைமணி ஸ்ரீமதி சுஜித்ரா ஜெயசீலன் குமார் மற்றும் இசையமைப்பாளர் திரு ஜெய் ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர்.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, கோலாலம்பூர் புக்கிட் ஜலீலில் உள்ள ஸ்டேடியம் கார் பார்க் B பகுதியில் நடைபெற்ற ‘சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2026’ இறுதிப் போட்டியின்போது விருது வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பி. குணராஜ் ஜார்ஜ், மூவருக்கும் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், ஓம்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ‘ஓம்ஸ்’ பி. தியாகராஜன், அஜெண்டா சூரியா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜக் ராவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இசை மற்றும் கலைத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இளம் திறமையாளர்களின் இசைப் பயணத்தை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கலைஞர்களின் பங்கேற்புடன் சிறப்பாக அமைந்தது.

Scroll to Top