பெட்டாலிங் ஜெயா, 01 மே 2026 : SPM 2025 தேர்வில் சிறப்பாக 9A பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் யுகேஷ் இளங்கோவனை, மஇகா (MIC) இளைஞர் பிரிவு பெட்டாலிங் ஜெயா தலைவர்கள் நேரில் சந்தித்து பாராட்டினர்.
மஇகா இளைஞர் பிரிவு பெட்டாலிங் ஜெயா தலைவர் ஜனகன் யோஹயிந்திர குமார் மற்றும் செயலாளர் சதீஷ்குமார் உதயகுமார் ஆகியோர், மாணவர் யுகேஷ் இளங்கோவனின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை வாழ்த்தி கௌரவித்தனர்.
SPM தேர்வில் 9A பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த யுகேஷ், தனது முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் உயர்கல்வியில் சிறந்து விளங்கி நாட்டிற்கு பங்களிக்கும் வகையில் தனது கல்விப் பயணத்தை தொடர்ந்து முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த சந்திப்பு, மாணவர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகவும், இளைஞர்களிடையே கல்வி விழிப்புணர்வை வளர்க்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.





