என் தமிழ்

UPSR அறிவியல் 018, 028, 038 கேள்வி தாள் வெளியானதால் தேர்வுகள் தள்ளிவைப்பு

upsrPC MB lepas mesyuarat exco. (10/10/07)

நாளை 11 செப்டம்பர் 2014 காலை 8.15 மணி முதல் காலை 09.30 மணி வரை நடை பெறுவதாக இருந்த UPSR அறிவியல் 018, 028, 038 தேர்வுகளின் கேள்வி தாள்கள் வெளியானதை தொடந்து அந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மலேசியன் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. நாளை நடக்க வேண்டிய தேர்வுகள் 30 செப்டம்பர் 2014 அன்று நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தாள்கள் சமூக வலைதளங்கள் வழியாக பரவி வருவதாகவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. கேள்வி தாள் எப்படி வெளியானது என்பது ஆய்வறிந்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கல்வி துணை அமைச்சர் 2 டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜிஷோ கேள்வி தாள் வெளியானதற்கு மாணவர்களிடமும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரினார்.

Scroll to Top