புதுடெல்லி, 27 ஏப்ரல் 2026 : நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளுக்கான பரிந்துரைகளை பொதுமக்களும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். சமூக சேவை, அறிவியல், கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்களை பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்களுக்காக அமைதியாக சேவை செய்து வரும் அறியப்படாத நபர்களையும் முன்னிறுத்தும் வகையில் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. “மக்களின் பத்மா” என்ற நோக்கில், பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





