புக்கிட் மெர்டாஜம், 25 ஏப்ரல் 2026 : தேசிய தகவல் பரவல் மையம் (NADI), தற்போது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (ITU) ஒரு டிஜிட்டல் உருமாற்ற மையமாக (DTC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil கூறுகையில், இந்த சர்வதேச அங்கீகாரம், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் Malaysian Communications and Multimedia Commission (MCMC) மற்றும் International Telecommunication Union (ITU) இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக, மக்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த இணையவழி பயிற்சி அங்கீகாரத் திட்டங்களை வழங்குவதில் இது முக்கிய பங்காற்றும் என்று தெரிவித்தார்.
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) கட்டமைப்பைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மலேசியாவிற்கு ஒரு முக்கியமான ஆண்டாகும். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, மலேசியா தனது ITU மன்ற இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போட்டியிட உத்தேசித்துள்ளது.
“இந்தப் பதவிக்கான முடிவு மற்றும் வாக்குப்பதிவு காலம், வரும் நவம்பர் மாதம் கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற உள்ளது,” என டத்தோ ஃபஹ்மி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இங்குள்ள நாடி குபாங் செமாங் தேசிய தகவல் பரப்புதல் மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வளர்ச்சி குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 4ஜி இணைப்பு தற்போது 99.7 சதவீதத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சமூகத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், பல NADI மையங்கள் தற்போது 2 Gbps வரையிலான அதிவேக இணைய வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன.





