16 ஏப்ரல் 2026 : பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் “புதையல் வேட்டை 2026” நிகழ்ச்சி சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது. மலேசிய தமிழ்நெறிக் கழகமும் பெஸ்தாரி ஜெயா ஆசிரியர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 47 குழுக்கள் கலந்து கொண்டன.
இசையுடற் பயிற்சியுடன் தொடங்கிய இந்த போட்டி, பெஸ்தாரி ஜெயா, புக்கிட் பாடோங், ஈஜோக் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வகையில் நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, பலரின் ஒத்துழைப்பும் அயராத உழைப்பும் காரணமாக வெற்றிகரமாக அமைந்தது.
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய மலேசிய தமிழ்நெறிக் கழகத்திற்கும், அனைத்து ஆதரவாளர்களுக்கும் பள்ளி நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது.








