என் தமிழ்

எரிசக்தி பாதுகாப்புக்கு AZEC ஒத்துழைப்பு அவசியம் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், 16 ஏப்ரல் 2026 : எரிசக்தி விநியோகம் நிலையானதாகவும், போதுமானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, ‘ஆசிய பூஜ்ஜிய உமிழ்வு சமூகம் (AZEC)’ மூலம் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்துகிறது” என்று பிரதமர் டத்தோ செரி அன்வார் இப்ராஹிம் கூறினார். பொருளாதாரம் மீள்திறனுடன் இருப்பதையும், மக்களின் நல்வாழ்வு பேணப்படுவதையும் உறுதிசெய்ய, எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது என்பதை, ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதிக்கும் மேற்கு ஆசியாவின் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன என்று அவர் கூறினார்.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உட்பட, ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், பிராந்திய எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதில் மலேசியா ஒரு ஆக்கப்பூர்வமான பங்கைத் தொடர்ந்து ஆற்றிவரும்.

“…புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்துவதுடன், தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி அமைப்பையும் வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நடைபெற்ற எரிசக்தி மீள்திறன் குறித்த AZEC பிளஸ் இணையவழி உச்சிமாநாட்டில் பங்கேற்றதன் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டது. மிகவும் நெருக்கடியான நேரத்தில் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சிக்கு டத்தோ செரி அன்வர் தனது பாராட்டையும் தெரிவித்தார்.

Scroll to Top