என் தமிழ்

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: டத்தோ ஸ்ரீ ஜி – தமிழ் ஊடகங்களுடன் சந்திப்பு

புசோங், 14 ஏப்ரல் 2026 : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கலைத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் டத்தோ ஸ்ரீ ஜி, தமிழ் ஊடக நண்பர்களுடன் சிறப்பு சந்திப்பு மற்றும் இரவு விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்ச்சி புசோங் பகுதியில் உள்ள லெஜண்ட் சீஃபுட் உணவகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், தேசிய ம.இ.காவின் தகவல் பிரிவு அதிகாரி சிவசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் பங்கேற்றார்.இந்த சந்திப்பு, ஊடகத்துறையினருடன் நல்லிணக்க உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனுடன், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டத்தோ ஸ்ரீ ஜியின் புதிய ஆடல் காணொளி வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. சமீப காலங்களில் அவரது ஆடல் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.மேலும், டத்தோ ஸ்ரீ ஜி இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு, கலை மற்றும் ஊடகத் துறைகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Scroll to Top