ஸ்கொட்லாந்து, 14 ஏப்ரல் 2026 : 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுகளில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டுகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செலவுகளை குறைக்கும் நோக்கில், இந்த முறை போட்டி எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் நடத்தப்பட உள்ளது. இதனால், முந்தைய போட்டிகளை விட விளையாட்டு பிரிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், மொத்தம் சுமார் 10 விளையாட்டு பிரிவுகள் மட்டுமே இடம்பெற உள்ளன. இதில் தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிள், நெட்பால், எடை தூக்கும் போட்டி, குத்துச்சண்டை, ஜூடோ, பாஸ்கெட்ட்பால் மற்றும் லான் பவுல்ஸ் போன்றவை அடங்கும். இதனால் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன், மல்யுத்தம் உள்ளிட்ட பல பிரபல விளையாட்டுகள் இந்த முறை நீக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம், போட்டியின் செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், எதிர்கால காமன்வெல்த் விளையாட்டுகளில் மீண்டும் இந்த விளையாட்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





