கோலாலம்பூர், 10 ஏப்ரல் 2026 : தென்கிழக்கு ஆசியாவில் Lazada நிறுவனத்தின் 14வது பிறந்தநாள் விற்பனை விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு சலுகை நிகழ்வில், LazMall விற்பனை மதிப்பு (GMV) 6 மடங்கு உயர்வு கண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விற்பனை காலத்தில், மொத்த தள விற்பனை 3.5 மடங்குக்கும் மேல் உயர்ந்திருந்தது. மலேசியா முக்கிய சந்தையாக திகழ்ந்தது. குறிப்பாக, மலேசியாவில் மொத்த GMV 5.5 மடங்கு உயர்ந்திருந்ததுடன், LazMall விற்பனை 12 மடங்கு அதிகரித்திருந்தது. இது, நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ பிராண்ட் கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக விருப்பம் காட்டியிருந்ததை வெளிப்படுத்தியது.
விற்பனை காலத்தில், LazMall மொத்த தள விற்பனையின் 60% பங்கையும், மொத்த ஆர்டர்களில் 41% பங்கையும் வகித்திருந்தது. மலேசியாவில் மட்டும் பார்த்தால், மொத்த விற்பனையின் 41% LazMall மூலம் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சர்வதேச பிராண்டுகளின் தேவையும் அதிகரித்திருந்தது. குறிப்பாக TMALL மற்றும் Gmarket போன்ற அதிகாரப்பூர்வ கடைகள், ஆர்டர்களில் 2.5 மடங்கும், GMV-யில் 3.5 மடங்கும் வளர்ச்சி பெற்றிருந்தன.
வகைபிரிவுகளின் அடிப்படையில், வீட்டு உபயோகப் பொருட்கள் 30 மடங்கு, மொபைல் மற்றும் டேப்லெட் 28 மடங்கு, விளையாட்டு காலணிகள் மற்றும் ஆடைப் பொருட்கள் 24 மடங்கு, அத்தியாவசிய பொருட்கள் 21 மடங்கு வளர்ச்சி கண்டிருந்தன. அழகு சாதனப் பொருட்களும் 15 மடங்கு உயர்வு கண்டிருந்தன.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் விற்பனையில் முக்கிய பங்கு வகித்திருந்தது. Lazada-வின் AI உதவியாளர் “Lazzie” மூலம் வாடிக்கையாளர்கள் விரைவாகவும் தெளிவாகவும் வாங்கும் முடிவுகளை எடுத்திருந்தனர். இந்த AI கருவிகள் மூலம் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விற்பனை நடந்திருந்தது.
மொத்தத்தில், வாடிக்கையாளர்கள் விலை மட்டும் பார்க்காமல், நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை மற்றும் எளிதான வாங்கும் அனுபவத்தை முக்கியமாகக் கருதியிருந்தனர் என்பதையும், இ-காமர்ஸ் துறையில் புதிய மாற்றம் உருவாகி வருவதை இந்த விற்பனை விழா வெளிப்படுத்தியிருந்தது.





